Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் ‍Crack-ம்

ஒரு வீட்டில் தன் மனைவி, மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்தார் நாராயணாசாமி.

அந்த வீடு கட்டப்பட்டு சுமார் 15 வருடங்களுக்கு மேலாவிட்டதால் சுவற்றில் அங்கங்கே வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

ஒரு நாள் அவரது மனைவி அவரிடம் சொன்னாள்,
  
"வீட்டு சுவரில் crack விழுந்துள்ளது. அது பெரிதாக சுவர் கீழே சாய்ந்துவிடும் முன் சரி செய்துவிட வேண்டும் ... அதனால அதை சரி பண்ரதுக்கு கொத்தனாரை அழைத்து வாங்க... "

"சரி.. அழைத்து வருகிறேன்" என்று சொன்னாரெயோழிய, வேலைப்பளு காரணமாக அவரால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

மனைவி பல முறை சொல்லியும் நாராயணசாமி மறந்து விடுகிறார். பொறுத்துப் பார்த்த அவர் மனைவி வேறு வழியின்றி, அதற்கான பொருள்களை வாங்கிவந்து அவராகவே பூசி விடுகிறார்.

சில நாட்கள் கழிந்த பின் நாராயணசாமி மனைவியிடம் கேட்டார்,

"என்ன crack சுவற்றில்காணலையே..? யார் பூசுனா..?"

அதற்கு அவர் மனைவி சொன்னாள்,

"ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒண்ண நானே பூசிட்டேன்.. "
 

No comments:

Post a Comment