Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் அழகும்

"ஏங்க... எங்கே போறீங்க?"

அவரசமாக கிளம்பிக் கொண்டிருந்த நாராயணசாமியை கேட்டாள் அவர் மனைவி.

"ஏதோ இன்னைக்கு பந்தாமே ... பஸ்ஸு, ரயிலு எதுவும் ஓடாதாம் ... எல்லா கடையும் பூட்டித்தான் இருக்குமாம் ... டாஸ்மாக் தவிர‌ "

"அதுக்கு?"

"அதுக்குன்னா...போயி அவங்களாவது ஒழுங்கா வேலை செய்றாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்டி"

"நீங்க ஒண்ணையும் புடுங்க வேண்டாம் ... ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே, அவளுக்கு சீக்கரமா அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும் ... தரகரைப் பார்த்து விசாரிச்சிட்டு வாங்க"

" நான் ஏற்கனவே சொல்லி வச்சிருக்கேண்டி...அறிவா,அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிற வரைக்கும் நம்ம பொண்ணு காத்திருக்கட்டும்"

"எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?"

" !!! "

No comments:

Post a Comment