ஒரு ஊரில நாராயணசாமி ஒரு பையன் இருந்தானாம். பயங்கர வாலு.
எப்ப பாத்தாலும் ஏதாவது பிரச்னை பண்ணிடுகிட்டே இருப்பான். அதனால பக்கத்து வீட்டுக்காரங்கல்லாம் அவங்கம்மா கிட்ட புகார் பண்ணிட்டே இருப்பாங்களாம்.
அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவனைத் திருத்த முடியல.
அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் நாராயணசாமியை திருத்தலாம்னு சாமியார் கூட்டிட்டு போனாங்களாம்.
அந்த சாமியார நாராயணசாமி விநோதமா பார்க்க, அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்,
"கடவுளை பாத்திருக்கியா?"
நாராயணசாமி புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் கொஞ்சம் முறைச்சிக்கிட்டே.
நாராயணசாமி லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"
நாராயணசாமி பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.
அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
நாராயணசாமி சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே ஒரு ரூமுக்குப் போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அப்பா கேட்டார்,
"என்னடா பிரச்னை? ஏன் இப்டி ஓடி வர்ர?"
"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"
"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"

No comments:
Post a Comment