Tuesday, 4 October 2016

சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியுமா???

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் சம்பந்தப்பட்ட அனைத்து கட்டளைகளையும் சசிகலாவே பிறப்பிப்பதாகவும், சசிகலா குடும்பம் அதிமுகவை கைப்பற்ற முனைவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியுமா என்றால் முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
அதற்குக் காரணம்,
1. போயஸ் தோட்டத்தில் ஒட்டிக் கொண்டுள்ள சசிகலா குடும்பம் ஒரு தனிப்பட்ட கும்பல் தானே ஒழிய இந்த சமூகத்திற்காக நகத்தளவு நன்மையையும் செய்யாதவர்கள்.
2. முதல்வர் ஜெயலலிதா பின்னால் இருக்கும் வரைக்கும் தான் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் மதிப்பு மரியாதை எல்லாம். இல்லையென்றால் எச்சில் இலை போல தூக்கி எறியப்படுவார்கள்.
3. "துரோகிகள்" என்று வர்ணித்ததுடன் பெருச்சாளியின் வாலைப் பிடித்து அடித்து தூக்கி எறிந்ததைப்போல, ஜெயலலிதா சசிகலா கூட்டத்தை போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடித்த போது, சசிகலா குடும்பத்திற்காக ஒருவர் கூட ஆதரவு குரல் கொடுக்கவில்லை. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சசிகலா கூட்டத்துக்கு தொண்டர்களிடம் இருக்கும் ஆதரவை.
4. தான் தான் அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையில், சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின் நடந்த சங்கரன் கோவில் இடைத்தேர்தல் மட்டுமின்றி புதுக்கோட்டை இடைத் தேர்தலிலிலும் தனக்குப் பிடித்தவர்களையே பிரச்சாரத்துக்கு அனுப்பி சசிகலாவுக்கு கடுப்பேற்றியவர் ஜெயலலிதா. அரசியலைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர் சசிகலா.
5. சசிகலா வெறும் கட்சி உறுப்பினர் மட்டுமே. ஏற்கனவே தான் எந்த பதவியும் வகிக்க மாட்டேன் என்று ஜெயலலிதாவிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
குறிப்பாகச் சொல்வதானால், சசிகலா கூட்டம் ஒரு தலையில்லாத முண்டம். அவர்களால் கொள்ளையடிக்கும் பணத்தைத்தான் பங்கு போட்டுக் கொள்ள முடியும். ஒரு போதும் அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியாது.

No comments:

Post a Comment