Tuesday, 4 October 2016

சசிகலா வரமாட்டார்!

முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதோடு, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என உடன்பிறவா தோழி சசிகலா உத்திரவிட்டு வருவதாக செய்திகள் உலா வருகின்றன.
ஆனால், அதில் உண்மை சிறிதளவும் இல்லை.
சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு சேர போயஸ் தோட்டத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் துரத்தப்பட்ட போது, ஜெயலலிதா சசிகலா குடும்பம் குறித்து சொன்ன வார்த்தை "துரோகிகள்"
அந்த நேரத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்ததாகவும், அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகையில். இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்திதாகவும், அதன் மூலம் கட்சியையும், ஆட்சியையும் மன்னார்குடி குடும்பம் கைப்பற்ற திட்டமிட்டதாலேயே அதிமுகவிலிருந்து போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பபட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.
அதன்பின், "நான் அக்காவுக்கு எந்த துரோகமும் செய்ததில்லை. துரோகமிழைத்தது அனைத்தும் என் குடும்பத்தினர்தான்" என்று மட்டும் குறிப்பிட்ட சசிகலா, "இனி எனக்கு கணவர் தேவையில்லை, அண்ணன் தேவையில்லை, சகோதர சகோதரிகள் யாரும் தேவையில்லை. அக்காவின் (ஜெயலலிதா)அன்பு மட்டுமே போதும்" என்றதோடு, "கட்சியில் எந்த பதவியும் வகிக்க மாட்டேன், அதுபோல் சாதாரண பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன்" என அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்தான் சசிகலா. அதன்பின்னர் தான் ஜெயலலிதா மன்னார்குடி குடும்பத்தை போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
எனவே, பழைய காலத்தை மனதில் வைத்துக் கொண்டு சசிகலாவின் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சிலர் சொல்வது, நம்பத்தக்கது அல்ல என்பதே உண்மை.
சசிகலா ஒரு அடிமை அவ்வளவுதான்.

No comments:

Post a Comment