கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருந்தால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்திருக்கக் கூடும்.
தென் மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக வாழும் மக்களிடையே தனித்தனியாக இயங்கி வந்த இயங்கங்களையெல்லாகம் ஒன்றிணைத்து திமுக பக்கம் திருப்பி விட்டார் கனிமொழி எம்பி அவர்கள். அதனாலேயே தெற்கிலும், மத்தியிலும் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது.
அதைப் போலவே, கடைசி நேரத்தில் வட மாவட்டத்தில் பெரும்பான்மையாக மக்களான வன்னியர்களையும் ஒன்றிணைத்து திமுக பக்கம் திருப்புவதற்கான முயற்சியில் இறங்கியிருந்த போது, சிலரின் நடவடிக்கைகளால் அது கைகூடாமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் இன்று திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்.
அதைப் பற்றி இப்போது பேசுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.
தற்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, வட மாவட்டங்களில் அதிமுகவை விட அதிகமான கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் கனிமொழி எம்பி அவர்கள், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களோடு வட மாவட்ட மக்களையும் திமுக பக்கம் திருப்புவதற்கான முயற்சியில் உள்ளார்.
குறிப்பாகச் சொல்வதானால், பாமக போட்டியிட்டு இரண்டாவது இடம் வந்த நாலு சட்டசபை தொகுதிகள், டெபாசிட் தொகை வாங்கிய 20 தொகுதிகளில் மட்டும், வன்னியர் சமுதாய வேட்பாளர்களை களம் இறக்கி திமுகவை முதலிடத்தில் வெற்றி பெற வைக்க கூடிய புள்ளி விபரங்களை அறிக்கையாகத் தயாரித்து தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார் கனிமொழி அவர்கள்.
தலைவரின் அனுமதியுடன் கனிமொழி அவர்களின் தேர்தல் வியூகம் செயல்பாட்டுக்கு வரும். திமுகவின் வெற்றியில் பெரும்பங்கு கனிமொழி அவர்களுடையதாகவே இருக்கும்!!

No comments:
Post a Comment