ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த நாராயணசாமி தன் இருக்கையில் போய் உட்கார்ந்தார்.
அவரின் பக்கத்து இருக்கை ரொம்ப நேரமாக காலியாக இருப்பதை பார்த்த அடுத்த இருக்கைக்காரரான மண்ணுசாமி நாராயணசாமியிடம்,
"அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா?" என்று கேட்டார்.
"இல்லை, போட்டி முடியும் வரை அந்த இருக்கை காலியாகத்தான் இருக்கும்" என்றார் நாராயணசாமி.
"நம்பவே முடியவில்லை, ஐபில் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?" என்று அவர் சொல்ல,
"இல்லை ...அந்த இருக்கையும் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது"
"ஓ...எப்படி இறந்தார்கள்?"
"நான் வளர்த்த நாயே அவளை கடித்துக் குதறிவிட்டது" எனக் கண்ணீர் விட்டார் நாராயணசாமி.
"உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய..? அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே?"
"அவர்கள் யாரும் கிரிக்கெட் பார்க்கவரும் சூழ்நிலையில் இல்லை"
"ஏன்?"
"அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!"
"..??????????"

No comments:
Post a Comment