நாராயணசாமி மிமிக்ரி செய்வதில் வல்லவர்.
மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் என அனைத்து குரல்களும் அவருக்கு அத்துபடி.
ஒரு நாள் ஒரு ஊருக்கு மிமிக்ரி செய்வதற்காக சென்றார். போட்டியின் விதிமுறைகளில் மிமிக்ரி செய்யும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் நாராயணசாமிக்கு, தன் பூனையையும் துணைக்கு அழைத்துவந்தால் எப்படியும் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்று தோன்றவே, அதனையும் தன்னுடன் பயணத்தில் இணைத்துக் கொண்டார்.
கையில் ஒரு பூனையுடன் மிமிக்ரி செய்யும் மேடைக்குச் சென்றார் நாராயணசாமி.
அங்கிருந்த நடுவர் ஆச்சர்யத்துடன்,
"பூனை எதற்கு?" என்றார்.
"எனக்கு உதவிக்கு!, போட்டி விதியிலேயே ஒருவரை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறதே"
"சரி என்ன மாதிரி மிமிக்ரி செய்யப் போற ?"
"சாப்பாடு போட்டா பூனை எப்படி கத்தும், அடிச்சா எப்படி கத்தும்? இந்த ரெண்டும் நான் செய்யப் போறேன் சார்”
"வெரி குட் ...ஆமா பூனை எப்படி இதுக்கு ஹெல்ப் பண்ணப் போகுது ?"
ஆச்சரியத்தோடு கேட்டார் நடுவர்.
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"சாப்பாடு போடுறது , அடிக்கிறதெல்லாம் நான் பண்ணப்போறென் சார், கத்துற ஹெல்ப் மட்டும் அது பண்ணும்!"

No comments:
Post a Comment