தீபாவளி நெருங்கிவிட்டது. இன்று போனஸ் வாங்கியிருப்பார் நாராயணசாமி. எப்படியும் ரூபாய் 15000 கிடைத்திருக்கும்.
வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்கிவிட வேண்டும் என்பது அவர் மனைவியின் நீண்ட நாள் கனவு. இன்று அது நிஜமாகப் போகிறது.
நாராயணசாமி அலுவலகம் விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்டாள் அவர் மனைவி,
"என்னங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?"
மனைவியை சற்று மேலும் கீழுமாய் பார்த்த நாராயணசாமி சொன்னார்,
"நான் கொஞ்சம் டென்சனா இருக்கேன்...ஒரு கப் காபி கொடுக்குறியா?"
மளமளவென்று காபி போட்டு கொடுத்துவிட்டாள். மனைவியின் கேள்விக்கு நாராயணசாமி பதில் எதுவும் சொல்லவில்லை.
சாப்பாட்டு நேரம். உணவு பறிமாறிக் கொண்டே கேட்டாள்,
"என்னங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?"
"சாப்பிடும் போது வேற தேவையில்லாத கதையெல்லாம் பேசுறது சாப்பாட்டையே அவமதிக்கிற மாதிரி ... எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா கேளு"
நேரம் கடந்தது. தூங்கும் நேரம் வந்தது.
மெல்ல நாராயணசாமியை பார்த்துக் கேட்டாள் அவர் மனைவி.
"என்னங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?"
"இதப் பாரு ... தூங்குறப்போ எந்த கவலையையும் மனசுல வச்சிக்கக்கூடாது ...அப்பதான் நிம்மதியா தூங்க முடியும் ... எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம் ... இப்போ என்னை நிம்மதியா தூங்க விடு"
பொழுது விடிந்தது. அவசர அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் நாராயணசாமி.
இதுதான் சரியான நேரம் எனப்பட்டது அவர் மனைவிக்கு.
""என்னங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?"
"இதப்பாரு... நான் அவசரமா கெளம்பிகிட்டிருக்கேன் ... இப்போ எதையாவது கேட்டு என்னை மூட் அவுட் பண்ண வச்சிடாத ... எதுவா இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுமுறைதானே அன்னைக்கு பேசிக்கலாம்."
ஞாயிறும் வந்தது. மெரினாவில் கடல் அலைகளை ரசித்தபடி அமர்ந்திருந்தனர் இருவரும்.
இந்த தருணத்தை விட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.
"என்னங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?" மெதுவார ஆரம்பித்தாள்.
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"இதப்பாரு ... இன்னைக்கு லீவு நாள் ... ஆறு நாளும் வேலை செஞ்சிட்டு இன்னைக்குதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் ... அதுவுமில்லாம நாம இங்க சந்தோசமா இருக்குறதுக்குத்தான் இங்கே வந்திருக்கோம் ... நீ எதாவது கேட்டு நம்ம சந்தோசத்தை கெடுத்திடாதே"
மறு நாளும் வந்தது ...மறு நாளும் வந்தது ...
கனவு கனவாகவே இருந்தது நாராயணசாமியின் மனைவிக்கு.

No comments:
Post a Comment