Tuesday, 11 October 2016

நாராயணசாமியும், காதலியும்

நாராயணசாமியும் ஒரு பெண்ணும் உயிருக்குயிராக காதலித்தார்கள்.

ஒருநாள் மெரீனா கடற்கரையில்,

"ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது?"

"மன்னிச்சுக்க டார்லிங் ... நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்"

"பேச்சுல மட்டும் குறைச்சலில்லை.."

"நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு"

"கோபத்துல என்ன அழகு இருக்கு?"

"கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான் ... சரி.. இந்தா சுண்டல்"

"நீங்க சாப்பிடுங்க"

"நீதான் முதல்லே ... லேடீஸ் பர்ஸ்ட் ..."

"சரி ... இப்போ சொல்லுங்க ... நம்ம கல்யாணம் எப்போ?"

 "இது என்ன கேள்வி ... என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட் ... முதல்லே நீ பண்ணிக்க ... அதுக்கப்புறம் நான் பண்ணிக்கிறேன்"

No comments:

Post a Comment