Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் நாயும்

நாராயணசாமி ஒரு பிரபலமான வக்கீல்.

ஒரு நாள் தலைமை நீதிபதியை அவருடைய வீட்டில் பார்க்க அவரது சென்றிருந்தார்.

நீதிபதியைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது… நீதிபதியின் வீட்டு நாய் பலமாகக் குரைத்துக்கொண்டே நாராயணசாமியின் பின்னால் ஓடிவந்தது.

நாராயண‌சாமி பயந்து போய் வேகமாக ஓடத்தொடங்கினார்.

அதைப் பார்த்த நீதிபதி உரத்த குரலில் கேட்டார்,

"ஏனய்யா ஓடுகிறீர்? குரைக்கிற நாய் கடிக்காது" என்கிற பழமொழி உமக்குத் தெரியாதா?"

நாராயண‌சாமி நீதிபதியைப் பார்த்துச் சொன்னார்,

"பழமொழி உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ... நாய்க்குத்தெரிய வேண்டுமே..? "

No comments:

Post a Comment