நாராயணசாமியும் விவாகரத்தும்
நாராயணசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையில் சதா சண்டை நடந்து கொண்டேயிருந்தது.
அதற்கு ஒரு முடிவு கட்ட, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
ஒரு நாள் வழக்கு விசாரணையின் போது,நீதிபதியை பார்த்து,
"தன்னுடைய கணவரிடமிருந்து ஜுவனாம்சத்தொகை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை" என ஆணித்தரமாக சொன்னாள் நாராயணசாமியின் மனைவி.
"அப்படியா ... அதிசயப் பெண்ணாக இருக்கிறாயே? ... வேறு எதை உன் கணவரிடமிருந்து எதிர்பார்க்கிறாய்" நீதிபதி வியப்போடு கேட்டார்.
"நான்
விரும்புவதெல்லாம் ... நான் அவரைத் திருமணம் செய்து கொண்டபோது என்ன
நிலையில் இருந்தேனோ அந்த நிலையிலேயே அவர் என்னை விட்டு விட்டுப் போனால்
போதும்"
"நீ என்ன நிலையிலிருந்தாய் ?"
நாராயணசாமியின் மனைவி சொன்னாள்,
"அவர் திருமணம் செய்து கொண்டபோது நான் விதவையாக இருந்தேன்"
No comments:
Post a Comment