Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் சுத்தமும்

நாராயணசாமியை அழைத்துக் கொண்டு ஒரு மருத்துவமனைக்குச் சென்றார் அவர் மனைவி.

நாராயணாசாமியை பரிசோதித்த படி மருத்துவர் கேட்டார்,

"என்ன பிரச்சினை?"

"ஒண்ணுமில்லை டாக்டர் ...எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''

"சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?"

"ஒரு வாரமா இப்படி இருக்கு!"

"இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?"

"வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!"

No comments:

Post a Comment