பாடம் நடத்திக் கொண்டிருந்தார் நாராயணசாமி.
அப்போது சில மாணவர்கள் "குசுகுசு"வென பேசி சண்டை போட்டுக் கொண்டிருப்பது அவருக்கு கேட்டது.
"என்னடா...அங்கே சத்தம்? ... எதுக்கு சண்டை போடுறீங்க?"
"ஒண்ணுமில்ல
சார் ... இன்னைக்கு காலையில ஸ்கூல் வர்றப்போ கீழே இந்தப் பத்து ரூபா
கெடந்ததை நாங்க ரெண்டு பேருமே பார்த்தோம். ரெண்டு பேர்ல யார் பெரிய பொய்
சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் இது சொந்தம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும்
மாத்தி மாத்திப் பொய் சொல்லிட்டு இருந்தோம். அதில யார் சொன்னது பெரிய பொய்
அப்படீங்கிறதிலதான் எங்களுக்குள்ளே சின்னதா ஒரு சண்டை"
"ச்சே!
உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு
ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?" பெருமையாகச் சொன்னார்
நாராயணாசாமி.
அதற்கு அந்த பையன் சொன்னான்,
"அப்பாடா ...சார் இந்த பத்து ரூபா கண்டிப்பா உங்களுக்குத்தான்"
No comments:
Post a Comment