Tuesday, 11 October 2016

"நான்வெஜ்" நாசா!!!

நாராயணசாமி ஒரு கொடுங்கோலர். ஊர்த்தலைவர் கூட.

அவர் நில்லுன்னா நிக்கணும். உட்காருன்னா உட்காரணும். ஊரையே மிரட்டி வச்சிருந்தார்.

வீட்டிலும் அப்படித்தான். அவர் மனைவிக்கு அவரைக் கண்டாலே கை,கால் எல்லாம் நடுங்கும். நாராயணசாமியின் முன் ஒரு நாள்கூட அவர் உட்கார்ந்ததில்லை. அவ்வளவு பயம்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை. உடல் நலமின்றி படுத்த படுக்கையாகி விட்டார் நாராயணசாமி. பரிசோதித்த டாக்டர் என்னென்னவோ பரிசோதனை செய்து பார்த்தார். ஒன்றும் குணமானதாகத் தெரியவில்லை.

கடைசியில், "யூரின்" பரிசோதனைக்காக ஒரு பாட்டிலில் பிடித்து தன் கட்டிலின் அருகில் வைத்திவிட்டு தூங்கிவிட்டார் நாராயணசாமி.

அப்பொழுதுதான் அது நடந்தது. நாராயணசாமிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த அவரது மனைவியின் கால் பட்டு "யூரின்" கீழே கொட்டிவிட்டது.

ஆடிப் போய் விட்டாள் நாராயணசாமியின் மனைவி.

என்ன செய்வது? அவருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான்.

ஒரு யோசனை தோன்றியது. கணவரின் யூரினுக்குப் பதிலாக, தன்னுடைய யூரினை பாட்டிலில் பிடித்து வைத்து விட்டாள். எதுவும் நடக்காதது போல.

பரிசோதனை முடிந்து ரிசல்ட் வந்தது. நாராயணசாமியைப் பார்த்து,

"நீங்கள் கர்பமாக இருக்குறீர்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார் நர்ஸ்.

சப்த நாதமும் அடங்கிப் போனது நாராயணசாமியின் மனைவிக்கு.

கண்டுபிடித்து விட்டால்....

அடிப்பாரோ? உதைப்பாரோ?

வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாரோ?

பஞ்சாயத்தை கூட்டி விடுவாரோ?

......

......

என்றெல்லாம் மனம் பதறிக் கிடக்கையில்,

நாராயணசாமி மெதுவாகச் சொன்னார்,
*
*
*
*
*
*
"இதுக்குத்தான் நான் கீழே படுக்க மாட்டேன்னு சொன்னேன்"

No comments:

Post a Comment