Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் 12 வயது சிறுவனும்

நாராயணசாமி ஒரு பேருந்து ஓட்டுனர்.

ஒரு நாள் தன் நண்பர்களுடன் பேருந்தில் ஏறி ஓட்டுனரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்த ஒரு 12 வயது சிறுவன், வழவழவென்று தன் நண்பனிடம் கத்திப்பேசிக்கொண்டிருந்தான்.

"எங்க அப்பா காளைமாடாகவும், எங்க அம்மா பசுமாடாகவும் இருந்தால் நான்
கன்னுக்குட்டி. எங்கப்பா ஆண் யானையாகவும், எங்க அம்மா பெண் யானையாகவும் இருந்தால் நான் குட்டி யானை"

எரிச்சலைடைந்த ஓட்டுனர் நாராயணசாமி சும்மா இருந்திருக்கலாம். அவருடைய கெட்ட நேரம் பையனிடம் அவர் வாயைக் கொடுத்தார்.

"டேய்... கொஞ்சம் நிறுத்துடா தம்பி. இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. உங்கப்பா குடிகாரனாகவும், உங்க அம்மா ஊதாரியாகவும் இருந்தா, நீ இப்ப என்னவா இருப்பே?”

தயங்காமல் அந்த சிறுவன் சட்டென்று பதில் சொன்னான்,

"நான் பஸ் டிரைவரா இருப்பேன்"

No comments:

Post a Comment