Tuesday, 4 October 2016

தூத்துக்குடி மேயர்???

முதலாவதாக‌,தமிழகத்தில் எம்பி தொகுதிகள் மொத்தம் 39. அதில் 7 தனித் தொகுதிகள். அதன்படி பார்த்தால் இப்போது உள்ள 12 மாநகராட்சிகளில் 2 தொகுதிகளை தனித்தொகுதிகளாக அறிவித்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, வேலூர், திருநெல்வேலியை அடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநகராட்சி சென்னை. விகிதாச்சாரத்தின் படி சென்னையைத் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான‌ மாநகராட்சியாக அறிவித்திருக்க வேண்டும்.
பிறகு ஏன் தூத்துக்குடியை தாழ்த்தபட்டவர்களுக்காக மாநகராட்சியாக அறிவித்தார்கள்??? எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை அழித்தொழிக்கும் மனப்பான்மை தானே தவிர வேறெதுவும் இல்லை.
நாடார் என்றாலே ஜெயலலிதாவுக்கு எப்போதுமே எட்டிக் காய்தான். அதற்குக் காரணங்கள் பல உண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தாமரைக்கனி. எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர். அவரது செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பலமுனை போட்டிகளுக்கிடையே சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அதன்பின் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் சேர்ந்தார்.
ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூரின் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு வந்தார் ஜெயலலிதா. கூட்டம் குறைவாக இருந்தது. தாமரைக்கனியை தனியாக அழைத்த ஜெயலலிதா, "ஏன் கூட்டம் வரவில்லை?" என்று கேட்க, தாமரைக்கனி சொன்ன பதில், "நீங்கள் வருவதாக போஸ்டர் அடித்து ஒட்டினேன். ஆனால் யாருமே வரவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என சுயமரியாதையோடு பதில் சொல்லிவிட்டு ஜெயலலிதாவின் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியேறிய தைரியத்துக்கு சொந்தக்காரர் தாமரைக்கனி. திராணி உள்ளவர்களுக்கு அதிமுகவில் இடம் ஏது?? அதன்பின் திமுகவில் சேர்ந்தது, தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகனையே ஜெயலலிதா எம்எல்ஏவா ஆக்கி, அமைச்சராக்கியது தனிக்கதை.
அதுபோல் தான் அனிதா ராதாகிருஷ்ணனும். அதிமுகவில் சேர்ந்து குறுகிய காலத்தில் எம்எல்ஏ. அமைச்சர், மாவட்டச் செயலாளர் என்று கோபுரத்தின் உயரத்தை எட்டியவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2002 முதல் 2009 வரை தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் அவர் ராஜ்யம்தான் நடந்தது. அதற்கும் மேலாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். கட்சியைத் தாண்டி பொதுமக்களிடம் தனக்கென நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டார். தலைமையால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்??? மெல்ல ஓரங்கட்டத் தொடங்கியது அதிமுக தலைமை. வேறு வழி இன்றி திமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் இருந்தாலும் சரி, திமுகவில் இருந்தாலும் சரி திருச்செந்தூர் தொகுதியில் அவர்தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி இருந்த சமக தலைவர் சரத்குமாரை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா. அப்போதும் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் முகத்தில் கரியை பூசினார் அனிதா ராதா கிருஷ்ணன்.
அதைப் போலவே ஆஸ்டின் எம்எல்ஏவும் ...
இப்போது சசிகலா புஷ்பா .... இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் முழங்கியது மட்டுமின்றி, தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
பொதுவாகவே அதிமுகவில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால் அவர் செல்லாக்காசாகி விடுவார். அதுதான் விதி. யாராவது ஒருவர் எதிர்க்கலாம். ஆனால், ஒரு சமூகத்தில் உள்ள அத்தனை பேருமே தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் போராடுவதற்கு முன் வந்தால், அதனை ஆணவம் மிக்க தலைமையால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்????
அதுதான் ... அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இன்று நாடார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தூத்துக்குடி மாவட்ட மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கியுள்ளது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு.
இது நாடார் சமூகத்தின் மீதான மறைமுகத் தாக்குதல் தானே அன்றி வேறு எதுவும் இல்லை.

No comments:

Post a Comment