Tuesday, 4 October 2016

உங்களுக்கு ஆட்டுகுட்டி கதை தெரியுமா???

கேக்குரவன் கேனையா இருந்தா கேப்பைல நெய் வடியுமாம்..
1936 ஆண்டு விருதுநகர் நகராட்சி தேர்தல் நடந்ததாகவும், அதில் காமராஜர் போட்டியிட விரும்பியதாகவும், வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல அது என்பதால், நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்ற சூழ்நிலையில், காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை என்றும், முத்துராமலிங்க தேவர் அவருக்கு ஒரு ஆட்டுக்குட்டி (ஒருசிலர் ஒரு ஆட்டுக்குட்டி என்கிறார்கள் சிலர் ரெண்டு ஆட்டுக்குட்டி என்கிறார்கள்) வாங்கி கொடுத்து காமராஜரை ஓட்டர் ஆக்கியதாக ஒரு கட்டுக்கதை உலாவி வருகிறது.
அதற்க்கான விடை ஆதாரத்துடன் இங்கே.
1936ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.தனது வெற்றிக்கு முக்கிய காரணமான மிகப்பெரிய ஆர்கனைசரான காமராஜரை கட்சியின் இரண்டாவது பெரிய பதவியான ஒரே மாநில செயலாளராக்கினார்.
1936ல் ஜில்லா போர்டு தேர்தல் வருகிறது, அந்த காலகட்டத்தில் முதுகளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவராக முத்துராமலிங்கதேவர் பதவி வகித்தார்(இதைவிட பெரிய பதவியை காங்கிரசஸில் தேவர் எந்த காலத்திலும் பெறமுடியவில்லை)
ராமநாதபுரம் முதுகளத்தூர் சர்க்கிள் உறுப்பினராக தேவரும்,கமுதி சர்க்கிள் ஜில்லா போர்டு உறுப்பினராக வேலுச்சாமி நாடாரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
ஜில்லா போர்டு தலைவராக இருந்த அண்ணல் சவுந்திரபாண்டியன் போல் தானும் ஜில்லா போர்ட் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் குதித்தார் முத்துராமலிங்க தேவர் .
தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை ஜில்லா போர்ட் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு ஜில்லா போர்டு உறுப்பினர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வாகனத்தில் சென்று பார்த்து நிலமையை தனது ஆதரவாளரான குமாரசாமிராஜாவுக்கு சாதகமாக்கினார் மாநிலசெயலாளர் காமராஜர்.
ராமநாதபுரம் ஜில்லா போர்ட் தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை வேட்பாளராக அறிவிக்கசெய்தார் காமராஜர். இதனை ஏற்றுக்கொள்ள கூடாது என தேவரின் உற்ற நண்பரான வீரர்வேலுச்சாமி நாடார் தேவரிடம், "நீங்கள் போட்டி இடுங்கள் நான் ஆதரவு தருகிறேன் அல்லது நான் போட்டி போடுகிறேன் நீங்கள் ஆதரவு தாருங்கள்" என கேட்டு இருந்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தேவரே குமாரசாமிராஜாவை முன்மொழிந்து விட்டார். தான் போட்டியிட்டால் குமாரசாமிராஜாவை தோற்கடிக்க முடியாது என்பதே இதற்க்கு காரணம். வாய்பூட்டு சட்ட வீரரும் தனது நண்பருமான வேலுச்சாமி நாடாருக்கு ஆதரவு அளிக்காமல் பின்வாங்கி விட்டார் முத்துராமலிங்க தேவர்.
இதனால் தான் ஜில்லா போர்ட் தலைவராகும் வாய்ப்பை கெடுத்துவிட்டாரே காமராஜர் என்ற கோபம் தேவருக்கு உண்டு. அதன் வெளிப்பாடே சுமார் 20 வருடங்களுக்கு பின் பொய்யாக ஒவ்வொரு ஊர்களிலும் ஆட்டுகுட்டி கதை என்ற புளுகு மூட்டைகதைளை கூறித் திரிந்தார் முத்துராமலிங்க தேவர்.
இந்த உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் தான் தேவருக்கும் வீரர்வேலுச்சாமி நாடாருக்கும் வாய்பூட்டு சட்டம் போடப்பட்டது ஆதாரம் (தி இந்து மதுரை பதிப்பு) 7.11.1936.
காமராஜரின் பாட்டனார் சின்னப்ப நாடார் ஒரு நாட்டாமை என்பது அனைவருக்கும் தெரியும். அவரது சித்தப்பா கருப்பையா நாடார் துணிக்கடை வைத்திருந்தார். அவரது மாமனார் திருவனந்தபுரத்தில் பெரிய மரத்தொட்டி வைத்திருந்தார். இப்படி இருக்கும்போது காமராஜர் ஓட்டர் ஆகக் கூட பணமில்லாத நிலையில் இருந்தார் என்றால் சின்ன குழந்தையும் நம்பாது.
1936ம் ஆண்டு பெருந்தலைவர் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாநில செயலாளர். அப்போது முத்துராமலிங்க தேவர் முதுகளத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருக்கு வட்டார
தலைவர் ஆடு வாங்கி கொடுத்திருந்தால் நிச்சயம் அது செய்தியாக வந்திருக்கும். ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப மாட்டார்கள். ஆதாரம் இருந்தால் செய்தி வெளியிடவும் அறிவுள்ளவர்கள் பொய் செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
1940ல் ஒத்துழையாமை இயக்கத்திற்கு சாதகமாக செயல் பட்டதினால் அப்போதைய ஆங்கிலேயர் அரசினால் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காமராஜர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்படுகிறார். 1941 ல் காவலில் இருந்தபோதே விருதுநகரில் நகராட்சி தலைவராக "ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமராஜர்" அவருக்கு அப்போது யாரும் ஆட்டுக்குட்டியும் வாங்கி கொடுக்கவில்லை. நாய்க்குட்டியும் வாங்கி கொடுக்கவில்லை.
அந்த பொறுப்பை கூட அவர் சிறையிலிருந்து வந்த சில நாட்களிலேயே கட்சிப்பணியை காரணம் காட்டி துறக்கிறார். இந்நிகழ்ச்சி 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ம் தேதி நடந்தது.
ஆட்டுக்குட்டி கதையை நம்பிய தேவர் சமுதாய இளைஞர்கள் சிலர் இதை கூறி தேவர் புகழ் பாடி வருகின்றனர் இது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். உண்மை சிலநேரங்களில் கசக்கும்.

No comments:

Post a Comment