1907-ம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பேரையூர் கிராமத்தில் பிறந்தவர் வ.மூ.சி.வேலுச்சாமி நாடார்.
1936-ல் காங்கிரஸில் தீவிரமாக இயங்கத் தொடங்குகிறார் வேலுச்சாமி நாடார். அந்த காலகட்டங்களில் முத்துராமலிங்கத் தேவரும் காங்கிரஸில் தீவிரமாக இருந்தார். எனவே வேலுச்சாமி நாடாரோடு நெருக்கமாகிறார் முத்துராமலிங்கத் தேவர்.
கள்ளர், மறவர் ஜாதி மக்களுக்காக போடப்பட்ட ரேகைச் சட்டம் என்னும் படுக்கைச் சட்டம் அமலில் இருந்த காலம் அது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து, தனது சொந்த ஊரான பேரையூரில், 1936 ஆம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்துகிறார் வேலுச்சாமி நாடார்.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து இந்தக் கூட்டம் நடைபெற்றதால், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த வேலுச்சாமி நாடாருக்கும், கூட்டத்தில் பேசிய முத்துராமலிங்கத் தேவருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறது ஆங்கில அரசாங்கம். (தி ஹிந்து 7.11.1936)
இந்நிலையில் 1936-ல் கமுதியிலிருந்து காங்கிரஸ் ஜில்லா போர்டு மெம்பர் ஆனார் வேலுச்சாமி நாடார். அதே காலகட்டத்தில் சென்னை மாகாண் காங்கிரஸ் செயலாளர் ஆகிறார் பெருந்தலைவர் காமராஜர். இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், காமராஜரைப் பற்றி கிண்டலடித்துவிட்டார் முத்துராமலிங்கத் தேவர். இதை அருகிருந்து கேட்ட வேலுச்சாமி நாடார், அப்படிப் பேசவேண்டாமே என்று முத்துராமலிங்க தேவரிடம் கூறியிருக்கிறார். முத்துராமலிங்கத் தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவருக்கும் இடையே உரசல் ஆரம்பமானது.
1940-ம் ஆண்டு தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்குகிறார் வேலுச்சாமி நாடார். டபுள் பேரல் ரைபிளும் வாங்குகிறார்.
காமராஜர் விவகாரத்தில், வேலுச்சாமி நாடார்- முத்துராமலிங்கத் தேவர் உறவில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில்.... வேலுச்சாமி நாடார் வாங்கிய துப்பாக்கி முத்துராமலிங்கத் தேவருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இருவருக்குமான இடைவெளி அதிகமானது.
காமராஜர் விவகாரத்தில், வேலுச்சாமி நாடார்- முத்துராமலிங்கத் தேவர் உறவில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில்.... வேலுச்சாமி நாடார் வாங்கிய துப்பாக்கி முத்துராமலிங்கத் தேவருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இருவருக்குமான இடைவெளி அதிகமானது.
1941 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்துவதைக் கண்டித்து காந்தி இந்தியா முழுதும் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பேரையூரில் சத்தியாக்கிரகம் நடத்த வேலுச்சாமி நாடாருக்கு காந்தியிடமிருந்து கடிதம் வந்தது மாவட்ட கமிட்டி மூலமாக. இதில் பங்கேற்று வேலுச்சாமி நாடார் அலிப்பூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார்.
சிறை சென்று வந்தபின் காங்கிரஸின் மாவட்ட துணைத்தலைவர் ஆகிறார் வேலுச்சாமி நாடார். காமராஜரோடு வேலுச்சாமி நாடார் நெருங்க நெருங்க முத்துராமலிங்க தேவரிடமிருந்து விலகுகிறார்!
இந்த நிலையில்தான் முத்துராமலிங்கத் தேவரின் வைத்தியரான பெருமாள் பீட்டர் மூலம் வேலுச்சாமி நாடாருக்கு அறிமுகமாகிறார் இமானுவேல் சேகரன். துடிப்பான இளைஞரான இமானுவேல் சேகரனை காங்கிரஸ் கட்சிக்காக பட்டை தீட்டுகிறார் வேலுச்சாமி நாடார். முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான அரசியல் சக்தியாக மாறுகின்றனர் வேலுச்சாமி நாடாரும், இமானுவேல் சேகரனும்!
நாடார் இன மக்கள் மட்டுமின்றி தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் வேலுச்சாமி நாடாரின் பின்னால் அணி திரள்வதை முத்துராமலிங்கத் தேவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அப்போது, 1936-ல் வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊரான பேரையூரில் கூட்டம் போட்டு வேலுச்சாமி நாடாரைப் புகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர், 1957-ம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் அதே பேரையூரில் கூட்டம் நடத்தி வேலுச்சாமி நாடாரை கடுமையாக விமர்சிக்கிறார்.
முதுகுளத்தூர் கலவரம் தொடர்பாக 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பணிக்கர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் ஆகியோரோடு கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர் வேலுச்சாமி நாடார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் இம்மானுவேல் சேகரனைப் பார்த்து, "நான்சென்ஸ்" என்று முத்துராமலிங்கத் தேவர் கூறிய போது, "யூ ஆர் த நான்சென்ஸ் மிஸ்டர் தேவர்" என இம்மானுவேல் சேகரனுக்காக களம் இறங்கினார் வேலுச்சாமி நாடார்.
அருப்புகோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகத்துக்கு எழுதிய கடிதத்தில், "வேலுச்சாமி நாடாரை நாம் மறந்தோமானால் நாம் நன்றி கெட்டவர்களாகிவிடுவோம்" என குறிப்பிடுகிறார் இம்மானுவேல் சேகரன். இது மண்ணுரிமை என்னும் இதழிலும் வெளியானது)
அதனைத் தொடர்ந்து, வேலுச்சாமி நாடாருக்கும், இம்மானுவேல் சேகரனுக்கும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பிக்கின்றன. இமானுவேல் சேகரனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிந்த வேலுச்சாமி நாடார் அன்று இரவு தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். தலைக்குக் குறிவைக்கப்பட்டிருந்த இருவரும் பேரையூரில் பாதுகாப்பாக இருந்தனர்.
மறுநாள் செப்டம்பர் 11 காலை... பாரதி விழா ஒன்றில் பேசவேண்டியிருப்பதாகச் சொல்லிக் கிளம்பினார் இமானுவேல் சேகரன்.
"இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை" என்று வேலுச்சாமி நாடார் தடுத்தும் இமானுவேல் சேகரன் கேட்காமல் புறப்பட்டார். அன்று இரவுதான் இமானுவேல் கொடூரமாக கொல்லப்பட்டார்.
"இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை" என்று வேலுச்சாமி நாடார் தடுத்தும் இமானுவேல் சேகரன் கேட்காமல் புறப்பட்டார். அன்று இரவுதான் இமானுவேல் கொடூரமாக கொல்லப்பட்டார்.
உண்மையில் இது வேலுச்சாமி நாடாருக்கும், முத்துராமலிங்க தேவருக்கும் இடையே உருவான தனிப்பட்ட பிரச்சினை. கடைசியில் தேவர்களுக்கும், தேவேந்திரர்களுக்கும் இடையேயான பிரச்சினையாக இன்று பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்காக மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றி, வகுப்பு நல்லிணத்துக்காக பாடுபட்ட வேலுச்சாமி நாடார் 1981 ஆம் ஆண்டு மறைந்தார்.
பல கொலை மிரட்டல்களுக்கிடையே வேலுச்சாமி நாடாரின் உயிரை கடைசி வரை காத்து நின்றது அந்த துப்பாக்கி!

No comments:
Post a Comment