நாராயணசாமியும்,மண்ணுசாமியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள்.
ஒருநாள் மண்ணுசாமி தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டார். கை துண்டானது. உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு கொண்ட நாராயணசாமி, மண்ணுசாமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மறுநாள் மண்ணுசாமியைப் பார்க்க போனபோது, அவர் படுக்கையில் இல்லை.
நாராயணசாமி செவிலியிடம் விசாரித்தார்.
"தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மண்ணுசாமி உள்ளே பூக்கூடையுடன் வந்தார்.
வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது.
மறுநாளே பணிக்குத் திரும்பிய மண்ணுசாமி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். நாராயணசாமி முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, மண்ணுசாமி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார்.
மீண்டும் வேலைக்கு வந்த மண்ணுசாமி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் நாராயணசாமி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார்.
மண்ணுசாமி படுக்கையில் இல்லை.
செவிலியிடம் நாராயணசாமி கேட்டார்..
"எங்கே என் நண்பன் மண்ணுசாமி..? கல் சுமக்க போயிருக்கிறானா..?"
"இல்லே.. செத்து பூட்டான்..!"
"அய்யோ.. எப்படி..?"
"நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"

No comments:
Post a Comment