Sunday, 9 October 2016

நாராயணசாமியும், தற்கொலை முயற்சியும்

விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார் நாராயணசாமி.

இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்துவிட்டார்.

விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு, கடைசியில்..

ரெயில் முன் பாய்வதுதான் சரியான யோசனையாகத் தோன்றியது...

தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டார்.

அவர் கட்டி வைத்திருந்த மூட்டையில் சிக்கன்,மட்டன் என அனைத்தும் அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்

பார்த்தவர்கள் வியந்தார்கள்.

"ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டையெல்லாம்?"

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"சரியாப் போச்சு போங்க ... நம்ம ஊருல் எந்த ரெயில் சரியான நேரத்திற்கு வந்திருக்கு ... அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?"

No comments:

Post a Comment