Sunday, 9 October 2016

நாராயணசாமியும், முட்டையும்

ஒருநாள் நாராயணசாமி தூங்கி எழுந்த போது, பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி இறந்து போய் இருப்பதை பார்த்தார்.

அரக்கப் பறக்க எழுந்து தலைகால் புரியாமல் நாலுகால் பாய்ச்சலில் மாடியில் இருந்து கீழே ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க  மூச்சு வாங்கியபடி வேலைக்காரியை அழைத்தார்

"மோனி, இங்க ஒடனே ஓடிவா ... சீக்கிரம்..அவசரம்...ஓடி வா"

ஓடிவந்த வேலைக்காரி,

"என்னய்யா என்ன விஷயம்?"

"நீ எப்போ வந்தே?"

"இப்பதான்யா வீட்டுக்குள்ளே நுழையுறேன்"

"அப்பாடா ... இன்னும் பிரேக்பாஸ்ட் பண்ணலையே?"

"இல்லையா"

"ரொம்ப நல்லதாப் போச்சு..இன்னியில் இருந்து டிபனுக்கு இரண்டுக்கு பதில் ஒரு முட்டை அவித்தால் போதும்"

No comments:

Post a Comment