Sunday, 9 October 2016

நாராயணசாமியும், பீர் பந்தயமும்

நாராயணசாமி ஒரு முறை ரஷ்யா சென்றிருந்தபோது, குடிப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

அங்கே ஒருவர்,

"நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு ப‌தினைந்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியஎனக்குில் தோற்றால் நீங்கள் ஹோட்டலுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் ...சவாலுக்குத் தயாரா?" என அறிவிக்க,

யாரும் அசையவில்லை. நாராயணசாமி மட்டும் எழுந்து அவசர அவசரமாக எழுந்து வெளியே போனார்.

15 நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தவர்,

"பந்தயத்துக்கு நான் தயார்" என்றார் அந்த ஆறிவிப்பாளரை நோக்கி.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அறிவிப்பாளர் வியந்து போனார்.

சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு,

"ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று ஆச்சர்யத்துடன் அறிவிப்பாளர் கேட்க, நாராயணசாமி சொன்னார்,

"பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்"

#கொய்யால யாருகிட்ட...

No comments:

Post a Comment