Sunday, 9 October 2016

நாராயணசாமியும், திருடனும்

திருடன் ஒருவன் ஒரு நாள் நள்ளிரவில் திருடுவதற்காக நாராயணசாமியின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.


வீட்டில் நாராயணசாமியும் அவரது மனைவியும் மட்டுமே இருந்தனர்.

திருடன் துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்த பொருள்களைக்
கொள்ளையடித்து மூட்டையாகக் கட்டினான்.

பிறகு,

"நான் வழக்கமாகக் கொள்ளையடிக்கும் ­ ­ வீட்டில் உள்ளவரின்
பெயரைக் கேட்டு விட்டு, அவரைச் சுட்டுக் கொல்வேன் ... உங்கள் பெயர் என்ன?" என்று நாராயணசாமியின் மனைவியை கேட்டான்.

"லக்ஷ்மி" என்றாள் நாராயணசாமியி மனைவி.

அதைக் கேட்ட திருடன் "லக்ஷ்மி என்பது என் அம்மாவின் பெயர்.
அதனால் உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை" என்று
சொல்லிவிட்டு,

நாராயணசாமியின் பக்கம் திரும்பி அவர் பெயரைக் கேட்டான்.

நாராயணசாமி நடுங்கியபடி பதில் சொன்னார்,

"என் பெயர் நாராயணசாமி. ஆனால் என் நண்பர்கள் எல்லோரும் என்னை
லக்ஷ்மி…லக்ஷ்மி ­ ­ என்று தான் கூப்பிடுவார்கள்"

No comments:

Post a Comment