Sunday, 9 October 2016

நாராயணசாமியும், 100 மாடி கட்டிடமும்

மண்ணுசாமி, சுப்புசாமி, நாராயணசாமி மூவரும் அலுவலக நண்பர்கள்.

அவர்களது அலுவலகம் ஒரு கட்டடத்தின் நூறாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் இருந்தது. அவர்கள் மின்தூக்கி (லிப்ட்) வழியாக தங்கள் அறைக்கு செல்வது வழக்கம்.

அப்படி ஒரு நாள் செல்லும் போது மின்தூக்கி வேலை செய்யவில்லை. பழுதடைந்திருந்தது. எனவே படிக்கட்டு வழியாக தங்கள் அறைக்கு ஏறிச் சென்றனர். அப்படி ஏறி செல்லும் போது பொழுதுபோக்கிற்காக ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டே செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் மண்ணுச்சாமி, பொருளாதாரத்தில் வளர்சி அடைந்த ஒரு நாட்டின் அருமை பெருமைகள முதல் 50 வது மாடிவரை சுவைபட சொல்லிக்கொண்டே வந்தார்.

இரண்டாவதாக சுப்புசாமி தொன்னுத்தொன்பதாவது தளம் வரை, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தினசரி அரசியல் செய்திகளைப் பற்றிக்கூறிநண்பர்களை சிரிக்கச் செய்தார்.

மூன்றாவதாய் நாராயணசாமியோ உணர்ச்சி மிக்க கதை ஒன்றை நூறாவது தளத்தை நெருங்கும் போது சொன்னார்.

அக்கதையை கேட்டு மற்ற நண்பர்களில் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. கதை சொன்ன நண்பரும் சேர்ந்து அழுதார். அவர் சொன்ன கதை அப்படி ஒன்றும் மிகப் பெரியதும் அல்ல. 

ஒரு  வரிக் கதைதான் !

அப்படி என்ன கதையை நாராயணசாமி சொல்லொயிருப்பார்???

...

......

"அறை சாவியை நான் காரிலேயே மறந்து வைத்து விட்டேன்"

No comments:

Post a Comment