நாராயணசாமிக்கு ஒரு பையன் இருந்தான்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்படிப்புக்கு முயற்சிக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிந்தான். அவனது செலவுக்கு வேறு தினமும் அவர் தண்டம் அழ வேண்டியதிருந்தது.
இது நாராயணசாமிக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒரு நாள் ஊதாரித்தனமாக செலவு பண்ணும் தனது மகனுக்கு பாக்கெட் மணி தருவது தொடர்பாக மனைவியிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
"ராணி...இனிமேல் நம்ம பையன் திருந்திடுவான்னு நெனைக்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு மதிப்பானதுன்னு நேத்து ராத்திரி விலாவாரியா அவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கேன்"
"ஓகோ. .. நீங்கதானா அது ?"
"எது ?"
"இன்னிக்கு காலை என்கிட்டே வந்து, ரூபாய்க்கு இவ்ளோ மட்டமான மதிப்பு இருக்கிறது நேத்துதான் எனக்கு தெரிஞ்சது ... பாக்கெட் மணியை இனிமேல் டாலர்ல கொடு-னு அடம்பிடிச்சான்.. . அது உங்களாலதானா ?"

No comments:
Post a Comment