பனைமரம் தமிழ் மண்ணின் மரம். இது இந்தியா மட்டுமின்றி இன்றும் தமிழர்கள் வாழும் மற்றும் தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், மொரீசியஸ், தென்னாப்ரிக்கா மற்றும் சீனாவிலும் பரந்து வளர்ந்து நிற்கிறது. உச்சி முதல அடி வரை மக்களுக்குப் பயன்படுவதாக இருப்பதால் இதனை "கற்பகத்தரு" என அழைப்பதோடு, தமிழர்களின் தேசிய மரமாகவும் பனைமரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மையில் பனை மரம்
************************************************
************************************************
நிலத்தில் நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் முதன்மையானது பனை மரம் ஆகும். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும். இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள்.
மேலும், மண் அரிப்பைத் தடுத்து கரையை பலப்படுத்தும் இயற்கை அரணாக பனை மரங்கள்
விளங்குகின்றன. கடும் வறட்சியிலும் நீரைத் தேக்கி வைக்கும் வல்லமை பனை மரத்துக்கு மட்டுமே உண்டு.
விளங்குகின்றன. கடும் வறட்சியிலும் நீரைத் தேக்கி வைக்கும் வல்லமை பனை மரத்துக்கு மட்டுமே உண்டு.
குறிப்பாகச் சொல்வதென்றால் "பனை உயர நாடு உயரும்" எனலாம்.
பனை மரத்தின் பயன்கள்
*************************************
பனைமரம் உணவுப் பொருள் மற்றும் உணவிலிப் பொருள்களை வழங்குகிறது.
*************************************
பனைமரம் உணவுப் பொருள் மற்றும் உணவிலிப் பொருள்களை வழங்குகிறது.
உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. மேலும், பதநீர் பல நோய்களை நீக்குகின்ற மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.
பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும்.
உடல் உறுப்பு தானம் என்ற கருத்தியலை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே பனை மரங்கள் தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பனையின் அத்தனை பாகங்களும் மனிதனுக்கு பயன்தரக் கூடியதாக இருக்கிறது.
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
மேலும், 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை பனை மரங்கள் வழங்கும்.
பனை மரங்களின் தற்போதைய நிலை
*******************************************************
*******************************************************
20 வருடங்களுக்கு முன் சுமார் 20 கோடி எண்ணிக்கையில் இருந்த தமிழர்களின் அங்கமான பனைமரம் இன்று 5 கோடியாக சுருங்கி விட்டது. அதற்குக் காரணம், பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 80% மக்கள் இன்னும் வாழ்க்கை தரம் உயராமல் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதுதான். அவர்களது வாரிசுகள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
இன்று குறைந்த அளவில் பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும், அவர்கள் பனைப் பொருள்களை உற்பத்தி செய்ய போதிய முதலீடு செய்ய முடியாத நிலையும், உற்பத்தி செய்த பொருட்களை சந்தப்படுத்துவதிலும் கூட சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, பனை மரத்தை நம்பி இருக்கும் பல இலட்சம் குடும்பங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பனை சார்ந்த தொழில்களால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இன்று அது வெகுவாகக் குறைந்துவிட்டது.
தற்போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்காததால் மரங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. முன்பெல்லாம் முதிர்ச்சி அடைந்த மரங்கள் மட்டும் வீடு கட்டுவதற்காக வெட்டப்பட்டன. ஆனால், தற்போது செங்கல் சூளைகளுக்காக மரம் ரூ.200-க்கும் ரூ.300-க்குமே வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது.
பனை மரங்களை பாதுகாக்க ...
*********************************************
*********************************************
"பனை மரங்கள் அழிவது எதிர்கால வறட்சிக்கு அறிகுறி" என்பதால் தமிழர்களின் அடையாளமான பனைமரம் அரிதான ஒன்றாக மாறி வருவது கவலைக்குறிய ஒன்றாக இருக்கிறது.
தமிழக அரசு முன்வந்து ஏரி,குளம், கண்மாய், ஆறுகளின் கரையோரங்களில் பனைவிதைகளை விதைக்கவும், எப்படி ஆந்திராவில் செம்மரங்களை வெட்டுபவர்கள் மீது ஆந்திர அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறதோ, அதே போல் தேவையின்றி பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பனைத் தொழிலாளர்க்கு ஊக்கம் அளிக்கின்ற வகையில், அவர்கள் பனைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், உள் நாடுகளில் சந்தப்படுத்தவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும்.
இது தவிர, அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெறும் மரம் நடு விழாக்களில் பனை விதைகளை விதைப்பதற்கு முன்னுரிமை கொடுக்கச் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment