Tuesday, 4 October 2016

திருப்பத்தூரில் மண்டியிட்ட எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபின் பல இடைத்தேர்தல்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதேபோல் 1981ம் வருடம் திருப்பத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வந்தது.
அந்த தொகுதியில் ஏற்கனவே திமுக+காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான வால்மீகி நிறுத்தப்பட்டு 10000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். எனவே, இடைத்தேர்த‌லில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரசுக்கே தொகுதியை விட்டுக் கொடுத்தது திமுக. அருணகிரி அம்பலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார்????
அதிமுகவின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர் என்ன முடிவு எடுப்பாரோ என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில், தனது பரம வைரியான திமுக ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வலிய முன்வந்து தனது ஆதரவை தெரிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் எம்.ஜி.ஆர்.
யோசித்துப் பாருங்கள். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு எதிர்கட்சியாகக் கூட இல்லாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்த ஒரே முதல்வர் உலகிலேயே இவர் மட்டும்தான்.
ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது தெரியுமா???
மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொன்னபிறகு காங்கிரஸ் அமைதியாக இருந்துவிடுமா???
காங்கிரசின் மத்திய அமைச்சரான ஆர்.வெங்கட்ராமன், "திருப்பத்தூர் தொகுதியில் காங்கிரஸ் தனித்தேப் போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. யாராவது ஆதரவளிக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வோம்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியமோ இன்னும் பல படிகள் மேலே போய், "எங்களுக்கு ஆதரவளிக்க எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால், எங்கள் கட்சி மேடைகளில் அவர்களை ஏற்ற மாட்டோம். அவர்கள் கட்சிக் கொடிகள் கூட எங்களது பிரச்சார வாகனங்களில் கட்டப்படாது" என பகீரங்கமாக அறிவித்தார்.
இவ்வளவு அவமதிப்புக்குப் பின்னரும் சொரணையற்ற எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரிக்கும் நிலையிலிருந்து பின் வாங்காமல் இருந்ததுடன், காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரமும் செய்தார்.
இறுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அருணகிரி அம்பலம் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின் குறிப்பு :
ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, திமுக யாருக்கும் ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்றதை, வானுக்கும் பூமிக்குமாய் குதித்து ஏளனம் செய்த இன்றைய அதிமுக அப்ரஸண்டிகளுக்கு, அவர்களின் தலைவரான எம்.ஜி.ஆர் செய்த கோமாளித்தன அரசியல் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment