Tuesday, 4 October 2016

எம்.ஜி.ஆர். என்னும் கோழை!

1977 மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவும், இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அந்த தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது மட்டுமின்றி ரேபரேலியில் போட்டியிட்ட இந்திரா காந்தியும் தோல்வியடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியப் பிடித்தது.
அதன் பிறகு 1978-ல் கர்நாடக மாநிலம், சிக்மகளூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், மக்களவையில் இந்திரா காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது.
அப்போது (1979) தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இத்தொகுதியில் 1977-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.டி. சோமசுந்தரம் சட்டமேலவை உறுப்பினராகி தமிழக அமைச்சரானார். இதன் காரணமாக தஞ்சாவூர் எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்ததால், அப்பதவி காலியாக இருந்தது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட முடிவு செய்தார். அவரை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி நிற்க போவதாக பேச்சு எழுந்தது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டால், அவரை வெற்றிபெற வைப்பதாக எம்.ஜி.ஆர். உறுதி அளித்தார்.
எம்.ஜி.ஆரின் உறுதி மொழியை நம்பிய‌ இந்திராகாந்தி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட‌ தயாராகி வந்த நிலையில், பிரதமர் மொரார்ஜி தேசாய் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்,
"நீங்கள் எங்கள் நண்பனா? எதிரியா?"
மொரார்ஜி தேசாயின் கேள்வியில் ஆடிப்போனார் எம்.ஜி.ஆர். உடனே, இந்திரா காந்திக்கு ஆதரவளிப்பதை கைவிட்டார்.
((எமர்ஜென்ஸி காலத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கைது செய்ய இந்திராகாந்தி நெருக்கடி கொடுத்த நேரத்தில், "காமராஜர் எங்கள் தலைவர். ஆட்சியே போனாலும் பரவாயில்லை. காமராஜரை ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்" என்று துணிச்சலாக எதிர்த்து நின்றவர் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்பது இங்கே குறிப்பிடத்தது))
அதன்பின் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிங்கார வடிவேல்தான் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.
எம்.ஜி.ஆர் பதவிக்காக எதையும் சமரசம் செய்து கொண்டவர் தான் உண்மை என்பதே தவிர, அரசியல் வரலாற்றில் அவர் ஒன்றும் வீரனல்ல.

No comments:

Post a Comment