IAS அதிகாரியான சந்திரலேகா ஜெயலலிதா அரசுக்கு எதிரான ஊழல் புகார்களை முன்வைத்தார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியில் இருந்த அவர் தனது பதவிக்காலத்தில் நடத்திய ஆய்வில், தனது துறையில் நடந்திருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதையொட்டி அரசுக்கும் அவருக்கும் இடையே மூண்ட மோதலில் சந்திரலேகா டம்மியான வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அந்த காலத்தில் சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.
அப்போது, IAS அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நியமன IAS ஆன மலைச்சாமி. சக அதிகாரியின் மீது ஆசிட் வீசப்பட்ட போதும் சங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நொந்து போன சந்திரலேகா, "மலைச்சாமி முதுகெலும்பில்லாதவர்" என்று விமர்சித்தார்.
தற்போது, முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ("டிட்கோ') தலைவர் -நிர்வாக இயக்குநருமான கே.ஞானதேசிகன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம்-கனிம வளத் துறை ஆணையாளருமான அதுல் ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உடனடியாக ஈஆஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் டேவிதாரின் ஆணைப்படி, IAS சங்க உறுப்பினர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க மனு கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் தன்னை முதுகெலும்புள்ளவர் என்பத நிரூபித்துள்ளார் சங்கத் தலைவர் டேவிதார்.

No comments:
Post a Comment