Wednesday, 12 October 2016

அதிரடி சசிகலா புஷ்பா! ‍- அரண்டு போன சசிகலா!

முதலில் இதனைப் படியுங்கள் ........
++++++++++++++++++++++++++
மொபைல் டேட்டா ஆன் செய்தோம். நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொன்ன சில விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.
‘சரியாக மதியம் ஒரு மணியளவில், சசிகலாவின் உறவினர்கள் டாக்டர் சிவகுமார், இளவரசி மகன் விவேக் உள்ளிட்ட சிலர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், நேராக இரண்டாவது தளத்தில் இருக்கும் சசிகலா அறைக்குள் போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அங்கே ஆலோசனை நடந்திருக்கிறது. 3.30 மணிக்குத்தான் அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.
சசிகலா புஷ்பாவின் பேச்சு கட்சிக்காரர்களிடம் பெரியளவில் தாக்கத்தை உண்டாக்கிவிடும் என சசிகலா பயப்பட ஆரம்பித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.’ - இது, நேற்று சொன்ன தகவல். அதாவது, சசிகலா புஷ்பா நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில், சசிகலாமீது புகார்களை நேரடியாகவே கொட்டித் தீர்த்துவிட்டார். அதன் பிறகுதான் அப்பல்லோவில் தன் உறவினர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் என்ன பேசினார்கள் என்ற தகவல் எங்கும் கசியவில்லை. வழக்கமாக, கார்டனில் என்ன நடந்தாலும் தனக்கு நெருக்கமான சில நண்பர்களிடம் இளவரசியின் மகன் விவேக் பகிர்ந்துகொள்வார். ஆனால் நேற்று சசிகலாவுடன் நடந்த ஆலோசனைபற்றி அவர் நண்பர்களிடம்கூட எதுவும் பேசவே இல்லை.
சசிகலாவுடன் பேசி முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து மாலை கிளம்பிச்சென்ற விவேக், திரும்பவும் இரவு 10.40 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். விவேக் வந்த காரை காவல் துறை நிறுத்தவில்லை. நேராக மெயின் பிளாக் இருக்கும் வாசலுக்குத்தான் போய் நின்றது. அந்தக் காரில் இருந்து விவேக்குடன் இன்னொரு நபரும் இறங்கினார். அவர் யார் என, அங்கிருந்த அமைச்சர்களுக்கே தெரியவில்லை. தரைத்தளத்தில் நின்றிருந்த சில அமைச்சர்கள் விவேக்கை பார்த்து வணக்கம் சொல்லியிருக்கிறார்கள். தலையை மட்டும் ஆட்டியபடி விறுவிறுவென லிஃப்ட்டுக்குப் போயிருக்கிறார் விவேக்.
இரண்டாவது தளத்துக்குப் போய் லிஃப்ட் நின்றிருக்கிறது. விவேக்குடன் வந்த நபரை காவல் துறையும் யாரென்றுகூட விசாரிக்கவில்லை. சசிகலா தங்கியிருந்த அறைக்கு அந்த நபருடன் விவேக் போயிருக்கிறார். 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நபருடன் வெளியே வந்திருக்கிறார் விவேக்.
அந்த நபர் யார்... அவர் எதற்காக சசிகலாவை சந்திக்கப்போனார் என்ற எந்த விபரமும் யாருக்கும் தெரியவில்லை. விவேக் மருத்துவமனைக்கு வரும்போது வழக்கமாகவே காவல் துறையினர் எதற்காகவும் நிறுத்த மாட்டார்கள். நேற்று இரவு, அவரோடு வந்த நபர் யார் என்றுகூட விசாரிக்காமல் இரண்டாவது தளம் வரை அனுப்பினார்கள் என்றால், முன்கூட்டியே அவரின் வருகைபற்றி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள்.
சசிகலா புஷ்பாவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, சசிகலா இயல்பு நிலையில் இல்லை என்கிறார்கள். ‘இப்படி பண்ணிட்டாளே அந்தப் பொம்பளை...’ என்று தொடர்ந்து புலம்பியபடியே இருந்தாராம். அது சம்பந்தமான ஆலோசனை நடத்துவதற்காகத்தான் விவேக் இன்னொரு நபரை அழைத்து வந்தார் என்றும் சொல்கிறார்கள். மன்னார்குடி வட்டாரத்தில் நடக்கும் அத்தனை மூவ்களும் அப்பல்லோ மருத்துவமனை சீக்ரெட்போலவே இருக்கிறது. எந்தவிதத்திலும் அவர்களின் மூவ் வெளியே தெரியக்கூடாது என்பதில் சசிகலா குடும்பத்தினர் கவனமாக இருக்கிறார்கள். சசிகலா, இளவரசி, டாக்டர் சிவகுமார், விவேக் ஆகிய நான்குபேரைத் தவிர அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியது”என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றினையும் போஸ்ட் செய்தது. அந்த ஸ்டேட்டஸ் லொக்கேஷன் கிரீம்ஸ் ரோடு எனக் காட்டியது.
"இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை வெறிச்சோடி இருந்தாலும் கிரீம்ஸ் ரோடு மட்டும் பரபரப்பாகவே இருந்தது. அமைச்சர்கள் வழக்கம்போல 8 மணியில் இருந்தே அப்பல்லோவுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் என அடித்தடுத்து வந்தார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள ரிசப்சனுக்கு பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் மட்டும் போனார்கள். சசிகலா உறவினர்கள் சிவகுமார், ராஜமாதங்கி, விவேக் உள்ளிட்ட சிலர் சசிகலா தங்கியிருக்கும் அறைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஆனால் பன்னீரையோ, எடப்பாடி பழனிசாமியையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சசிகலா தங்கியிருந்த அறைக்கு அழைக்கவோ இல்லை.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்தால் மட்டும் அவர்களிடம், ‘அம்மா நல்லா இருக்காங்க. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்’ என்று சொல்வதற்காக மட்டுமே அவர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மருத்துவமனைக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போனார். அவர் நீண்டநேரம் பன்னீர்செல்வத்துடன் பேசியபடி இருந்தார். ' அம்மா எப்படித்தான் இருக்காங்க.... சொல்லுங்க!' என்று சரத்குமார் கேட்டிருக்கிறார். ' சரியாகிட்டு இருக்காங்க. உங்களுக்குத் தெரியாததா? நீங்களே இப்படி கேட்கலாமா?' என்று பன்னீர் கேட்டதாகச் சொல்கிறார்கள்.
அதன்பிறகு வெளியேவந்த சரத்குமார், 'தொண்டர்கள் மற்றும் மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைவார்' என்று மையமாக சொல்லிவிட்டுப் போனார்.அதைப் படித்து லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். சற்றுநேர அமைதிக்குப்பிறகு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.
+++++++++++++++++++++++++++++
# இது நேற்று வாட்ஸ் அப்பில் உலவிய செய்தி. சசிகலா புஷ்பாவின் பேட்டி அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் துரோகக் கும்பலை எப்படியெல்லாம் அதிர வைத்திருக்கிறது என்பதற்கு நேற்று நமது எம்ஜிஆரில் சித்திரகுப்தன் என்னும் பெயரில் வெளிவந்துள்ள‌ சசிகலா புஷ்பா குறித்த விமர்சனமே சாட்சி. (அதன் ஸ்கிரீன் ஷாட் முதல் கமெண்டில்)
ஜெயலலிதா ஜெயிலுக்கு போவதற்கு முன்னாடியே, ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்று விட்டால் கட்சியையும் ஆட்சியையும் எப்படி கைப்பற்றுவது சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கூடிப் பேசியதால்தான், போயஸ் தோட்டத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டது சசிகலாவின் ஒட்டு மொத்த குடும்பமும்.
இப்போது, ஜெயலலிதா செயல்படமுடியா நிலையில் முடங்கிக் கிடக்கையில் சும்மா இருப்பார்களா???
சசிகலாவை முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்க கடும் பிரயத்தனங்களை செய்துள்ளது அந்த துரோகக் கும்பல்.
காய் கனியும் நேரத்தில் பேரிடியாய் இறங்கியது சசிகலாவின் பேட்டி.
இனி சசிகலாவை முன்னிறுத்தினால் பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதுவரும் என்பதை உணர்ந்து கொண்ட துரோக கும்பல் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தங்கள் திட்டங்கள் தவிடி பொடியானதை நினைத்து கலங்கி போயினர்.
பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் வகிக்கும் பொறுப்புகளை கொடுப்பதற்கு சசிகலா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. ஆனால், வேறு வழியின்றிதான் இப்போது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்குள்ளும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இத்தகைய பொறுப்பு கிடைத்ததற்கு மூல காரணமாக இருந்த‌ சசிகலா புஷ்பாவுக்குத்தான் பன்னீர் செல்வம் நன்றி சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment