நாராயணசாமியும் "காதலும்"!!!
நாராயணசாமியும் நாட்டாமை செந்திலும் ஒன்று.
அவருடைய மகன் ஒரு பெண்ணை காதலித்தான். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
செய்யவேண்டும் என்று நினைத்த அவன், நாராயணசாமியிடம் விவரத்தைக் கூற,
"வேண்டாம்...அவள் உனக்கு தங்கை முறை" என்றார் நாராயணசாமி.
பின்பு அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தான். அவளை மணம் செய்ய நாராயணசாமியிடம் கேட்டதற்கு,
"அவளும் உனக்கு தங்கைதான்" என்றார்.
அடுத்த கிராமத்து பெண்ணை காதலித்ததிலும் அதுவே நடந்தது.
இப்படி வேறு சில பெண்களை விரும்பினாலும் நாராயணசாமி சொன்னது,
"அவள் உனக்கு தங்கை முறை. எனவே அவளை மறந்து விடு"
கடைசியில் வெறுத்துப்போய் அவனது தாயிடமே சென்று கேட்க, நாராயணசாமியின் மனைவி சொன்னாள்,
"நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள். ஏனென்றால் உன் அப்பா அவர் இல்லை"
No comments:
Post a Comment