நாராயணசாமி வேட்டையாடுவதில் வல்லவர்.
குறி தவறாது சுடும் தனது திறமையை மகன் எதிரில் நிரூபிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம்.
ஒரு நாள் வேட்டைக்குப் போகும்போது மகனையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்.
சற்று தூரத்தில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது கண்டு நாராயணசாமிக்கு குஷி.
சில நிமிடங்கள் துப்பாக்கி முனையில் கொக்கை குறிபார்த்துவிட்டு,
"மகனே... இப்ப பார்" என்றபடி ட்ரிகரை அழுத்தினார்.
கொக்கு செத்துவிழப் போகிறது என்று மகன் எதிர்பார்க்க, துளி காயமுமின்றி எம்பிப் பறந்தது கொக்கு.
நாராயணசாமியை மகன் நகைப்போடு பார்க்க, சிறிதும் தயங்காமல் அவர் சொன்னார்,
"மகனே .. ஒரு அதிசயத்தைப் பார்க்கிற பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு. அதோ பார்... செத்துப்போன ஒரு கொக்கு பறந்துக்கிட்டிருக்கு"

No comments:
Post a Comment