Sunday, 9 October 2016

நாராயணாசாமியும், சச்சினும்

இந்திய கிரிக்கெட் அணிக்கு நாராயணசாமியையும் தேர்வு செய்திருந்தார்கள்..

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் நாராயணசாமியும், சச்சினும் துவக்க ஆட்டக்காரர்கள்..

முதலில் நாராயணசாமி, பிரெட் லீயின் புயல் வேக பந்துவீச்சை எதிர்கொண்டார்..

முதல் பந்து .. விர்ர்ர்ர்ர்ர்ரூம்... 145 கிமீ வேகம்.. நாராயணசாமி பார்க்கும் முன்னே அவரைக் கடந்து போனது..

2 வது பந்து... விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்... 147 கிமீ வேகம்.. அதே கதை..

3 வது பந்து.. 150 கிமீ வேகம்.. வி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இதுவும் வந்ததும் போனதும் மொக்கைக்கு தெரியவே இல்லை..

4 வது பந்து ஓவர் ஸ்டெப்பிங்..

நடுவர் "நோ பால்" என்று அறிவித்ததைக் கண்ட நாராயணசாமி நேரே சச்சினிடம் சென்றார்..

போகும்போது, தேர்ந்த பேட்ஸ்மேனைப் போல பிட்சை தன் மட்டையால் தட்டிக்கொண்டே சென்றார்..

சச்சின் என்னவென்று கேட்க.. நாராயணசாமி சொன்னார்,

"இப்போதான் அம்பயருக்குத் தெரிஞ்சிருக்கு இவன்கிட்ட பந்து இல்லேன்னு.. ஆனா அப்போலேருந்தே அந்த ஆளு.. சும்மா சும்மா ஓடி வரான்.. பந்து போடுவதுபோல நடிக்கிறான்.. ஆனா பந்தும் வரலே..ஒண்ணும் வரலே..!"

No comments:

Post a Comment