Friday, 28 October 2016

பொங்கியெழுந்து விட்டார் நாராயணசாமி.
தமிழகத்தின் மிகப்பிரபலமான பத்திரிகை ஒன்று அவரைப் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டது. அது அவருக்கு மிகப்பெரிய மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. பொதுமக்களிடையே அவர் பெயருக்கே களங்கம் வரும் நிலை ஏற்பட்டது.
பொறுக்க முடியாமல் அந்த பத்திரிகை அலுவலகத்துக்கே சென்ற நாராயணசாமி, அந்த பத்திரிகை ஆசிரியரிடம்,
"என்னைப்பற்றி ஏன் இவ்வளவு அவதூறாக எழுதுகிறீர்கள்? நீங்கள் எழுதுவதில் உண்மை எள்ளளவும் கிடையாது.. அது உங்களுக்கும் தெரியும். எந்த நோக்கத்தோடு இது போன்ற செய்திகளை வெளியிடுகிறீர்கள்" என கொதித்தார்.
அமைதியாக அந்த பத்திரிகை ஆசிரியர் சொன்னார்,
"இதோ பாருங்கள்மிஸ்டர் நாராயணசாமி... நாங்கள் உங்களைப் பற்றி எழுதுவது அனைத்தும் உண்மை இல்லை என்று எங்களுக்கும் தெரியும். ஆனால்....உங்களைப் பற்றிய உண்மைகளை எழுதினால் இதை விட மோசமாக இருக்குமே!...என்ன,உண்மையை எழுதவா?"
மறுபேச்சு பேசாமல் அந்த இடத்தைக் காலி செய்தார் நாராயணாசாமி.

No comments:

Post a Comment