Friday, 28 October 2016

நாராயணசாமிக்கு விரைவில் திருமணம்.
ஒரு நாள் தனது 75 வயது தாத்தாவிடம் திருமணத்திற்கு பிறகு எப்படி நடந்துகொண்டால், வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியிடையே பிரச்சினையில்லாமல் இருக்கு என்று அறிவுரை கேட்டுக்கொண்டிருந்தான் நாராயணசாமி.
தாத்தா சொன்னார்,
"'திருமணம் ஆனதும் கணவன் மனைவி இருவரும் எல்லா விஷயங்களிலும் 50-50 என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கையில் எந்த இருவருக்கிடையே எந்தவித மனவருத்தமும் வாராது"என்று கூறினார்.
"இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா,தாத்தா? கேட்டார் நாராயணசாமி.
அதற்கு தாத்தா சொன்னார்,
"நீ அவளுக்கு ஐம்பது ரூபாய்க்கு உன் மனைவிக்கு ஒரு பொருள் வாங்கிக் கொடுத்தால், உனக்கு ஐம்பது பைசாவுக்கு மட்டும் ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம்"

No comments:

Post a Comment