நாராயணசாமி ஒரு பால் வியாபாரி.
தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் எப்பொழுதும் கடவுளையே வேண்டிக்கொண்டிருப்பது அவர் வழக்கம்.
ஒரு நாள் நாராயணாசாமியின் முன் முன் கடவுள் தோன்றி,
"பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன" என்று கேட்டார்.
"ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்"என்றார் நாராயணசாமி.
கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானார்.
"வேறேதேனும் வேண்டுமா" எனக் கடவுள் திரும்பவும் அவனிடம் கேட்டார்.
"உங்களால் முடிந்தால்..."என்று அவன் இழுக்க,
"இன்னொரு குடம் பால் வேண்டுமா" என்று கடவுள் கேட்டார்.
அதற்கு நாராயணசாமின் சொன்னார்,
"நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்"
No comments:
Post a Comment