நாராயணசாமி ஒரு மிகச் சிறந்த மன நல ஆலோசகர்.
ஒரு நாள் ஒரு மனநல மருத்துவ மனை ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.
அதைக் கண்ட நாராயணசாமி அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவருடைய இமைகள் கூட அசையவில்லை. நாராயணாசாமியின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மன நல மருத்துவ மனை என்பதால் தனக்கு "பரிசு" எதையும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் தன்னை தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
பேச்சு முடிவுற்றதும் அந்த நோயாளி எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
நாராயணசாமியும் தன்னுடைய பேச்சுக் குறித்துதான் அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.
பின்னர் வார்டனிடம் அந்த நோயாளி என்ன சொன்னார் கேட்டார் நாராயணசாமி.
வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,
"என்ன கொடுமையடா சாமி ... இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறான்"

No comments:
Post a Comment