Tuesday, 4 October 2016

சசிகலா புஷ்பா vs சசிகலா


ஜெயலலிதாவால் "துரோகிகள்" என்று விமர்சிக்கப்பட்டு போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார் சசிகலா.
அவருடன் அவரது கணவர் நடராஜன், மற்ற உறவினர்களான திவாகரன், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மிடாஸ் மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, பழனிவேல், கலியபெருமான், சந்தானலட்சுமி சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா, சுந்தரவதனம் ஆகியோரும் நீக்கப்பட்டார்கள். அதேபோல் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
எந்த வகையில் துரோகம் இழைத்தார்கள் என்று ஜெயலலிதா விளக்கவில்லை.
எனினும், ஆந்திராவில் என்.டி.ராமராவை அதிரடியாக நீக்கிவிட்டு ஆட்சியை சந்திரபாபு நாயுடு கைப்பற்றியதைப் போல், ஜெயலலிதாவை நீக்கிவிட்டு கட்சியையும் ஆட்சியையும் மன்னார்குடி குடும்பம் கைப்பற்ற முயன்றதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.
வெளியேற்றப்பட்ட சசிகலா, "எந்த நிலையிலும் அக்காவுக்கு நான் துரோகம் இழைத்ததில்லை. துரோகம் செய்தவர்கள் என் கணவரும், சகோதர சகோதரிகளின் குடும்பமுமே. இனி எனக்கு கணவன் வேண்டாம்,
சகோதரன் வேண்டாம், சகோதரி வேண்டாம், கட்சியில் எந்த பதவியும் வேண்டாம். அரசியலில் ஈடுபட்டு ஒரு பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட ஆக மாட்டேன்" என்றதுடன்,
"என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (முதல்வர் ஜெயலலிதா) அர்பணித்து விட்டேன். எஞ்சிய காலத்திலும் அவருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்" என்ற அடிமை சாசன‌ அறிக்கையை மட்டும் வெளியிட்டார் சசிகலா.
திரும்பவும் மன்னார்குடியின் கையில் போயஸ் தோட்டம் வந்தது.
ஆனால், சசிகலா புஷ்பா விசயத்தில் நடந்தது என்ன???
தன்னை போயஸ் தோட்டத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததை, பொதுக் கூட்ட மேடையில் அல்ல பத்திரிகையாளரின் முன்பும் அல்ல இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மாநிலங்களவையில் மிக தைரியமாக ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினார் சசிகலா புஷ்பா.
(உடனே சில டயர் நக்கிகள் சசிகலா புஷ்பாவின் தனிப்பட்ட விஷயங்களை திரித்துக் கூறி அசிங்கப்படுத்த முயன்றனர். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயங்களையும் அலசி ஆராய நேர்ந்தால் அது எங்கே போய் முடியும் என்பது அவர்கள் அறியாததல்ல)
அத்துடன் விடவில்லை. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி மிரட்டிய போது,
"எந்த நிலையிலும் என் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். அத்தகைய சமுதாயத்தில் பிறந்தவள் அல்ல நான். வீரத்துக்குப் பெயர் போன மாவட்டத்தைச் சேர்ந்தவள்" என்று புரட்சிப் பெண்ணாய் சீறினார் சசிகலா புஷ்பா.
ஜெயலலிதா தன் வாழ் நாளில் இது போன்றதொரு துணிச்சல் மிக்க பெண்ணை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆம், கூழைக் கும்பிடு போட்டு வாழ சிலரால் மட்டுமே முடியும்!!

No comments:

Post a Comment