Wednesday, 12 October 2016

காணிக்கை

பிரதோச மாலை
கட்டுக்கடங்கா கூட்டத்தில்
தட்டுக் காணிக்கையில்
தரிசனம் முடித்து,
கோவிலை வலம் வந்து
வாசல் கடந்து,
பிச்சைக் கேட்கும் 
கூட்டம் விலகி,
காரில் ஏறுகையில் 
கேட்டது குழந்தை
"உள்ளே தட்டு வச்சிருக்கவங்களுக்கு பணம் போட்டே..
வெளியே தட்டு வச்சிருக்கவங்களுக்கு ஒண்ணுமே போடலையே ஏம்பா?"
======ஜெயந்த் பிரபாகர்

No comments:

Post a Comment