Sunday, 16 October 2016

ஊடகங்கள் மற்றும் நடுநிலையாளர்களின் கவனத்திற்கு

சசிகலா புஷ்பா அவர்களை மாநிலங்களைவை உறுப்பினராக நியமித்தது முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான். இடையில் எழுந்த பிரச்சினையில் அவர் அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டாலும், மாநிலங்களவையில் இன்றும் அதிமுக உறுப்பினராகவே செயல்படுகிறார்.
"முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பதவியில் ஏன் நீடிக்கிறீர்கள்? பதவியிலிருந்து விலகலாமே" என்று கேட்ட போது, "முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயார். ஆனால், வேறு யாருடைய நெருக்கடிக்கும் நான் பயந்து ராஜினாமா செய்ய மாட்டேன்" என்று தீர்க்கமாக கூறியவர் சசிகலா புஷ்பா.
இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் சசிகலா புஷ்பா அவர்கள் நடந்து கொண்ட விதத்தில், அதிமுகவின் தொண்டர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது சிலருக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
ஆனால், என்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ அன்றே தன் நிலையை மாற்றிக் கொண்டார் சசிகலா புஷ்பா.
இப்போது அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் நலன் மீது அக்கறை கொண்ட சாதாரண தொண்டனின் குரலாகவே இருக்கிறது.
மற்றவர்களை விடுங்கள். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகரைக் கூட முதல்வரைப் பார்க்க அனுமதிக்கவில்லையே. இது நியாயம் தானா???
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! முதல்வர் ஜெயலலிதா தனி மனுஷி அல்ல. 8 கோடி மக்களின் தலைவி. அவரது உடல் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவது தவறா????
இன்று சசிகலா புஷ்பாவுக்கு எதிராகக் கொடி பிடிக்கும் ஓநாய்கள், சில வருடங்களுக்கு முன்பு சசிகலாவுடன் அவரது குடும்பத்தினர் 14 பேரையும், துரோகிகள் என்று கூறி பெருச்சாளியை வாலைப் பிடித்து அடித்து ஏறிந்ததைப் போல‌ போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடித்தாரே முதல்வர் ஜெயலலிதா, அப்போது எங்கே போனார்கள்???
அதில் சசிகலா மட்டுமே மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சேர்க்கப்பட்டுள்ளார். மீதி 14 பேரும் போயஸ் தோட்டத்தில் மட்டுமல்ல, அதிமுகவிலும் இதுவரை சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது இவர்களுக்குத் தெரியுமா????
ஒரு அரசியல்வாதியை, மாநிலங்களவை உறுப்பினரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்வது????
சசிகலா புஷ்பா தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மட்டுமே. வேறு யாருக்கும் நடவடிக்கை எடுக்கவோ, விமர்சிக்கவோ உரிமை கிடையாது.
நரிகள் ஊளையிட்டு பொழுது விடியப் போவதில்லை!
பொறுத்திருங்கள்! முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் திரும்பி வருவார். சசிகலா புஷ்பா மீது தவறு இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும்.
அதுவரை சகலத்தையும் மூடிக் கொண்டிருங்கள்!!

No comments:

Post a Comment