நாராயணசாமியும் வார இறுதி நாளும்

ஒரு வெள்ளிக்கிழமை.
நாராயணசாமி என்னும் இளைஞர் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தார்.
அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை எடுக்கணும்" அப்டின்னார், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே.
கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு. நாராயணாசாமி சலிச்சுக்கிட்டே,
"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே அவ்ளோ அழகா இருக்கணும்"
கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார், அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல. உடனே நாராயணசாமி,
"ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக் தர்றேன்" அப்படின்னார்.
"ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல"
"ஓகே
இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழமை பேங்க்ல பணம் இருக்கான்னு கேட்டுட்டு
சொல்லுங்க. அப்புறம் நகையை வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அந்த
பெண்ணை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டார் நாராயணசாமி.
திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,
"யேய்...பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?"
"மன்னிச்சுக்கங்க
சார் ... பைசா இல்லைன்னு எனக்கும் தெரியும் ... ஆனா இந்த வீக் எண்ட்
எவ்வளவு சந்தோசமா போச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?"
No comments:
Post a Comment