பேரறிஞர் அண்ணா,
கலைஞர் கருணாநிதி,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என தொடர்ந்து முதலமைச்சருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவரது போதாத காலம் கடைசியில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
கலைஞர் கருணாநிதி,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என தொடர்ந்து முதலமைச்சருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவரது போதாத காலம் கடைசியில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
காலம் மாறியது. அதிமுகவிலிருந்து விலகிய நெடுஞ்செழியனை "உதிர்ந்த மயிர்கள்" என்று மிக கேவலமாக விமர்சித்தார் ஜெயலலிதா. பின்னாளில் அதே நெடுஞ்செழியன் அதே ஜெயலலிதா தலைமையில் இணைந்து செயலாற்றியது வரலாறு.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ கட்சி விலகுவதாக அறிவித்தார் அதன் தலைவர் சரத்குமார். சசிகலா கும்பலை போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடித்த போது "துரோகிகள்" என்று விமர்சித்த ஜெயலலிதா, சரத்குமார் மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை.
மாறாக, அவராகவே அழைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கினார்.
காரணம், சரத்குமார் நம்பிக்கையானர். கொண்ட தலைமைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காதவர் என்ற உண்மையை ஜெயலலிதா அறிந்திருந்தது தான்.
திமுகவிலிருந்து இவரை வெளியேற்ற கேடி பிரதர்ஸ் என்னவெல்லாம் பாடுபட்டார்கள் என்பதை அன்றைய அரசியலை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையான சரத்குமார், மிக உயர்ந்த பதவியை அடைவதற்கு அதிமுக தொண்டர்களின் முழு ஆதரவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:
Post a Comment