எத்தனை சொத்தும் பணமும் இருந்தாலும் "காதற்ற ஊசியும் வராது காணும் கடை வழிக்கே" என்பது இப்போதாவாது புரிகிறதா? அம்மாவுக்கு இந்த கதி என்று உணர்ந்த பின்னாவது மற்றவர்கள் திருந்துவார்களா?
அம்பு படுக்கையில் பீஷ்மர்.அப்பல்லோ படுக்கையில் அம்மா. இரண்டும் ஒன்றுதான். இருவருக்கும் வீரத்துக்கும், விவேகத்துக்கும், துணிச்சலுக்கும், மரியாதைக்கும் குறைவில்லை. முக்கியமாக தனிப்பட்ட குடும்பமும் இல்லை. ஆனாலும் செஞ்சோற்று கடனுக்காக தர்மத்தின் பக்கம் சேராமல் அதர்மத்திற்க்காக நின்றதால் கடைசியில் தலைகுனிவு.
ஊர் பேர் தெரியாத ரத்தத்தின் ரத்தங்கள் உண்மையாக துடிக்கின்றன. போலி கண்ணீர் வடிக்கும் கும்பல் அப்போல்லோவில் நடிக்கின்றன.
தெய்வத்தின் துணையால் அம்மா திரும்பி வரவேண்டும்.
இந்த மக்களுக்கு மேன்மேலும் நன்மை செய்ய தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பிக்கவேண்டும்.
உங்களால் முடியும் அம்மா.
போலி உறவுகளை துறந்து ஒரு உண்மை துறவியாய் மக்களை தவிர யாரையும் நினைக்காத, நேர்மையான வாழக்கையை வாழ்ந்து காட்ட மீண்டும் வாருங்கள் அம்மா!!

No comments:
Post a Comment