Sunday, 9 October 2016

நாராயணசாமியும், காவல் தெய்வமும்

ஒரு பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தார் நாராயணசாமி.

திடீரென்று,

"அப்படியே நில்.. அசையாதே.." என்றொரு சத்தம்.

ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் நாராயணசாமி அசையாமல் நிற்க, அவர் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

இவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்...

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்..

"இந்த பேருந்து வேண்டாம்..".

அவரும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது,  இவர் சென்றிருக்க வேண்டிய பேருந்து சாலையின் ஒருபுறம் கவிழ்ந்திருப்பதைப் பார்த்தார்...

இப்படியே பலமுறை நடந்தாகிவிட்டது....

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளான நாராயணசாமி "யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தார்..

அதற்கும் உடனடியாக பதில் வந்தது.. "நான் உன் காவல் தெய்வம்".

உடனே அந்த காவல் தெய்வத்திடம் சொன்னார் நாராயணசாமி,

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

No comments:

Post a Comment