Saturday, 29 October 2016

பெருந்தலைவர் முதலமைச்சராய் இருந்த போது,
பல்வேறு அலுவல்களை முடித்துவிட்டு காலதாமதமாக வந்தாலும் மறுநாளுக்கான பணிகளை ஒழுங்கு படுத்தி விட்டு தான் தூங்குவார் .
இதுபோன்ற ஒரு நாள் இரவில், தன் தனி அலுவலரை அழைத்த காமராஜர், ஐ.ஏ.எஸ்அதிகாரி ஒருவரை தொலை பேசியில் அழைக்க சொன்னார்.
காமராஜரின் தனி அலுவலர் போன் செய்ய, மறுமுனையில் பேசியது அந்த அதிகாரியின் நேர்முக உதவியாளர்.
உடனே காமராஜரின் தனி அலுவலர், தான் முதலமைச்சரின் தனி அலுவலர் என்ற கர்வத்துடன், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை காமராஜருடன் பேசச் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரியின் நேர்முக வுதவியாளர், அதிகாரி இப்போது தூங்குகிறார். எழுப்ப முடியாது என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார்.
இவர்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் நடந்தது.
"நான் நாலரை கோடி மக்களின் நாயகனுடைய உதவியாளர் பேசுகிறேன் அந்த ஐ .ஏ.எஸ் அதிகாரியை எழுப்புங்கள்"
மறு முனையில் இருந்து பதில் வந்தது.
"அவர் எக் காரணம் கொண்டும் தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டு தான் தூங்க சென்றார். எனவே எனது கடமையை தான் செய்கிறேன்"
இது போன்றொதொரு சம்பவம் இப்போது நடந்திருந்தால்....??!!

ஆனால், நம் அய்யா என்ன செய்தார் தெரியுமா?
மறுநாள் விடிந்ததும் தானே அந்த அதிகாரியை அழைத்தார். அவரோ விஷத்தை கேள்விப் பட்டு என்னாகுமோ? என்று பயந்தார்.

அந்த அதிகாரியிடம் அந்த நேர்முக உதவியாளரின் விபரங்களை கேட்டு அறிந்தார். ஐ.ஏ.எஸ்.அதிகாரி வருந்தியவரே பதில் சொல்லி கொண்டு இருந்தார்.
பெருந்தலைவர் திடீரென்று
"உங்க உதவியாளரை எனக்கு உதவியாளராக மாற்றி விடுங்க" என்று கூறி அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டார்.
அப்போதும் அந்த அதிகாரிக்கு புரியவில்லை.
தலைவர் சொன்னார்,
"யார் அழைத்தாலும் எழுப்பக்கூடாது என்று கூறியதால் நான் அழைத்தும் எழுப்ப மறுத்த கடமை உணர்ச்சி மிக்கவர் தான் உதவியாளராக இருக்க முடியும். அதனால் எனக்கு அவரை உதவியாளராக அனுப்பி வையுங்கள்"
ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் கடமை உணர்வு முதலமைச்சருக்கு எதிராக நடந்த பின்பும் பாராட்டினார் என்றால் இது தான் அரசியல் நாகரிகம்.

No comments:

Post a Comment