Wednesday, 12 October 2016

சரத்குமாரின் பெருந்தன்மை

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சமக தலைவர் சரத்குமார் சென்றதும், அங்கு மூத்த அமைச்சர்களுடன் நீண்ட நேரம் விவாதித்ததும் எல்லோரும் அறிந்ததுதான்.
அப்போது மிக முக்கியமான ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவர் சரத்குமாரிடம், சசிகலா குடும்பத்தாரால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும், கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் அவர்களது துரோக நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறி, நீங்களும் ஒரு அதிமுக உறுப்பினர்தான். எனவே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எதுவும் நடந்துவிடாதபடி தடுத்திட வேண்டும். அதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
அதற்கு பதிலளித்த சரத்குமார், முதல்வருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் இதுபோன்ற செயல்களின் நாம் ஈடுபடுவது தவறு. முதலில் முதல்வர் உடல் நிலை தேறி வரட்டும். அதுவரை பொறுமையாக இருப்போம். இதுவரை துரோகிகளின் எண்ணம் எதுவும் ஈடேறவில்லை. ஒருவேளை அவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றாராம்.
எதை வேண்டுமானாலும் செய்து பதவி சுகத்தை அனுபவிக்க நினைக்கும் மனிதர்களிடையே சரத்குமார் வித்தியாசமானவர்தான்.

No comments:

Post a Comment