மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.
இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனால் இதனை சருமத்தில் பூசினால் நிறத்தைத் தராது. ஆனால் நல்ல மருத்துவ குணம் கொண்டது.
மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். இதைத்தான் நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் வளர்ந்துள்ள முடியை மேலும் வளராமல் தடுத்து மென்மையாக்குகிறது. சருமத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது. ஆனால் இது சருமத்தை கடினமாக்கிவிடும் தன்மையும் கொண்டது.
இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment