நம்ம நாராயணசாமி ஒரு கூத்தாடி.
ஒரு நாள் தன் கழுதை,குரங்கு,நாய் இவற்றுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.
அந்த ஊரில் ஒரு விசேசமான கோவில் இருப்பதாகவும் அங்கு வேண்டிக் கொண்டது அப்படியே நடக்கும் என்று சொன்னார்கள் நாராயணசாமியும் தன் பரிவாரத்துடன் அக்கோவிலுக்கு சென்றான்.
கழுதை,குரங்கு,நாய் மூன்றும் கடவுளிடம் தங்களுக்கு பிடித்ததை வேண்டிக்கொண்டன.
நாராயணசாமி அவைகளிடம்,
"நீங்கள் எல்லாம் என்ன என்ன வேண்டிக் கொண்டீர்கள் என்பதை என்னிடம் சொல்லுங்கள். நான் அதில்லாமல் வேறேதேனும் வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.
கழுதை,
"என்னை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்"என்றது.
குரங்கு,
"என்னை தலைமை பிரதமராக ஆக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்"என்றது.
நாய்,
" நான் ஒரு மிகப் பெரிய சாமியாரக ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்" என்றது.
முடிவில் நாராயணசாமி கடவுளிடம் மன்றாடினார்,
"ஆண்டவனே,என் கண்ணைக் குருடாக்கிவிடு. இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்தை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது."
No comments:
Post a Comment