நாராயணசாமி ஒரு எண்ணற்ற தொண்டர்கள் நிரம்பிய கட்சியின் தலைவர்.
ஒரு நாள் தன் 15 தொண்டர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது,
"நானெல்லாம் நிறைய தவறுகள் செய்துள்ளேன்... குறிப்பாக நான் நடைபெறும் என்று சொன்ன எந்த காரியமும் நடந்ததே இல்லை.. இதனாலேயே மக்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விட்டது... மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் ஏற்பட்டதில்லை... எனவே நான் இறந்து போனால் நிச்சயமாக நரகத்திற்குத்தான் செல்வேன்" என்றார்.
"அப்படியானால் நாங்களும் உங்களுடனேயே நரகத்திற்குத்தான் வருவொம்" என ஒருமித்த குரலில் கத்தினர் தொண்டர்கள்.
குரு திகைத்துப் போனார் நாராயணாசாமி. கண்களில் நீர் மல்க,
"என் மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?"என்று கேட்டார்.
அதற்கு சீடர்கள் சொன்னார்கள்,
"நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுக்கப்படுவதை நாங்கள் பார்க்க வேண்டாமா?'
No comments:
Post a Comment